google.com, pub-4145425289384501, DIRECT, f08c47fec0942fa0
top of page

எச்சரிக்கை! தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை !!!


தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்து வருகிறது. முன்னதாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு சீரமைத்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ree

நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 25 முதல் நவம்பர் 27 வரை மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


ree

அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இன்று அறிவிக்கப்பட்டதால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ree

இந்நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, நெல்லை, ராமநாதபுரம். வங்கக் கடலில் இன்று இரவுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Chennai rain, flood, orange alert ⚠️  🚧  Warning! Orange Alert for Tamil Nadu !!!
சென்னையில் மழை, வெள்ளம், ஆரஞ்சு எச்சரிக்கை ⚠️ 🚧 எச்சரிக்கை! தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை !!!

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மக்கள் அனைவரும் கவனத்தில் எடுத்து, இந்த பருவமழை காலத்தை பாதுகாப்பான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என awezounique சார்பாக கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் செய்திகள் மற்றும் தகவல்களுக்கு Awezounique உடன் இணைந்திருங்கள்.


Kommentare


bottom of page